# சமூக வழிகாட்டுதல்கள்

- #### Duolingo என்பது மொழிப் பயில்பவர்களின் உலகளாவிய சமூகமாகும்

இலவச மொழிக் கல்விக்கான அணுகல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என நம்புகின்றோம். எங்கள் வழிகாட்டுதல்கள் இந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதன் அர்த்தம் குறித்த பரஸ்பரப் புரிதலை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களில் ஏதேனும் பின்பற்றப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம். எனவே அவற்றைக் கவனமாகப் படியுங்கள்.

- #### எப்போதும் மரியாதையளித்திடுங்கள்

உலகம் முழுவதிலும் இருந்து வேறுபட்ட மொழி நிபுணத்துவத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு இலக்கிற்காகவே இங்கு இணைந்துள்ளோம். ஆர்வம், கேள்வி கேட்டல் மற்றும் கலாச்சாரப் புரிதல் ஆகியவற்றை நாங்கள் கொண்டாடுகிறோம். மற்றவர்களுக்கும் அவர்களின் பின்னணிக்கும் மதிப்பளியுங்கள்.

- #### அனைத்து திறன் நிலைகளுக்குமான உதவி மற்றும் ஆதரவு

இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். ஒரு மொழியைக் கற்பது என்பது சிரமமானது மற்றும் அதற்கு அதிக தைரியமும் அர்ப்பணிப்பும் அவசியம். ஒருவரின் இலக்கணப் பயன்பாடு தவறாக இருந்தால் அல்லது எளிமையான விடையைக் கொண்ட கேள்வியை ஒருவர் கேட்டால், அவர்களுக்கு அன்பாகவும் அமைதியாகவும் உதவுங்கள். அவமதிக்கும் விதமாக இடையூறு செய்வதும் புண்படும் வகையில் வெளிப்படையாகப் பேசுவதும் பயில்வதற்கு உதவாது. அன்பாகச் சொல்ல முடியவில்லையா? நடுவில் தொந்தரவு செய்யாதீர்கள்.

- #### பிராந்திய மொழிகளின் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு, பகிருங்கள்

ஒரு மொழியானது பல வார்த்தைகள், பேச்சு வழக்குகள் மற்றும் ஒரு விஷயத்தைப் பல விதமாகக் கூறும் வழிகளைக் கொண்டிருக்கலாம். அவற்றை மொழிகளின் அதிசயங்களில் ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்த உரையாடல்களை ஒரு திறந்த மனநிலையிலும் அணுகுமுறையிலும் கையாளுங்கள்.

- #### பகிரும் முன் சிந்தியுங்கள்

உங்களின் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இன்னொரு மொழியைப் பேசுவது இயல்பாகவே சமூக ஈடுபாட்டுடன் தொடர்புடையதாகும். எனினும் தனிப்பட்ட தகவல்களைப் பரிமாற்றுதோ பதிவிடுவதோ தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தத் தகவல்களில் உங்கள் மொபைல் எண், வயது, முகவரி, நீங்கள் வீட்டில் இருக்கும் நேரம், பள்ளியின் பெயர், மின்னஞ்சல், உங்களின் தனியுரிமையை ஆபத்துக்கு உள்ளாக்கும் பிறத் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை அடங்கும். எளிமையாகக் கூறினால் தேவையில்லாமல் பகிர வேண்டாம். தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதும் பிறரைப் பகிரத் தூண்டுவதும் உங்கள் பதிவை நீக்க வழிவகுக்கலாம். அத்துடன், உங்கள் கணக்கை அகற்றும் சாத்தியத்தை உண்டாக்கலாம்.

* * *

# Duolingoஐ இவற்றுக்காகப் பயன்படுத்தாதீர்கள்...

- #### ஒருவரையோ குழுவையோ வார்த்துகள் அல்லது செயல்களால் தாக்குதல்

அனைத்து பின்னண்களைச் சேர்ந்த பயில்பவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடமாக Duolingo உள்ளது. துன்புறுத்தும் மற்றும் காயப்படுத்தும் உள்ளடக்கம் ஏற்றுக்கொள்ள되지 않습니다. வெறுப்பைத் தூண்டும் (அத்துடன் தொந்தரவு செய்தல், தவறான நோக்கத்துடன் பின்தொடர்தல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் ஒருவர் குறித்து பாலியல் ரீதியாக கருத்து தெரிவித்தல் ஆகியவையும் அடங்கும்) சின்னங்கள், பெயர்கள் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது வன்கொடுமை எனக் கருதுகிறோம். இது நிர்வாணம் மற்றும் மனதைப் பாதிக்கும் சுயவிவரப் படங்கள் மற்றும் பயனர் பெயர்களுக்கும் பொருந்தும். [விதிமுறைகளில்](https://ta.duolingo.com/terms) குறிப்பிடப்பட்டவாறு, தனது சொந்த விருப்பத்தின்படி படங்களை மாற்றுவதற்கோ கணக்குகளை அகற்றுவதற்கோ Duolingoக்கு உரிமை உள்ளது. அடிப்படை விதி: உங்கள் செயல் ஒருவரைத் தாக்குவதாகவோ காயப்படுத்துவதாகவோ இருந்தால், அதைச் செய்யக்கூடாது. இவ்வகையான புகார்களை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள்கிறோம் மற்றும் அத்தகைய செயலானது எங்கள் குழுவால் உறுதிசெய்யப்பட்டால் முன்னறிவிப்பின்றி உங்கள் கணக்கை நாங்கள் நீக்கக்கூடும்.

- #### தீங்கான வழியில் திட்டமிடுதல் அல்லது ஏமாற்றுதல்

நேர்மையான கற்றலில் Duolingo நம்பிக்கை கொண்டுள்ளது. ஏமாற்றுதல் அல்லது எங்கள் சிஸ்டம், சமூகம், கற்றல், தகவல்கள் அல்லது அனுபவத்தில் எதிர்மறையாகவோ குறிப்பிடத்தக்க அளவிலோ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழியில் Duolingoஐப் பயன்படுத்துவது குறித்த தகவல்களையும் வழிமுறைகளையும் பகிர்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஸ்கிரிப்டிங் செயலை மேற்கொண்டால், உங்களின் பதிவுகள் மற்றும் கணக்கு அகற்றப்படலாம்.

- #### ஆத்திரமூட்டும் கருத்துக்களை எழுதுதல்

வெறுப்பூட்டுகின்ற, தகாத அல்லது தொடர்பற்ற கருத்துகள் கற்றலுக்குப் பங்களிப்பதில்லை. வசை பேசுவதும் இதிலடங்கும் (மக்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டியதாகக் கருதுவது). மொழிக் கலந்துரையாடல்களில் அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

- #### சுருக்கிக் கூறுதல்

பின்வரும் உள்ளடக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை:

- சட்டத்திற்குப் புறம்பானவை
  - ஆபாசப் படம்
  - அதிகளவிலான தீங்கிழைக்கும் வார்த்தைகள் அல்லது வன்முறை
  - ஸ்பேம்
  - அச்சுறுத்துதல், தொல்லைக் கொடுத்தல் அல்லது துன்புறுத்தல்
  - இனவாதம் அல்லது சகிப்புத்தன்மையுடன் தொடர்புடையவை
  - தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் வழியில் ஒருவரைப் போல ஆள்மாறாட்டம் செய்தல்
  - தனிப்பட்ட இரகசியமான தகவல்கள்

குறுக்கு வழிகளைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்; இந்த வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் நாங்கள் அகற்றுவோம், அத்துடன் முன்னறிவிப்பின்றி Duolingoக்கான அணுகலை நீங்கள் முழுமையாகவோ பகுதியளவாகவோ இழக்கும் அபாயம் ஏற்படும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம் சுவாரஸ்யமான மற்றும் உதவிகரமான கற்றல் சமூகத்திற்கு நாம் அனைவரும் பங்களிப்போம்.
